• July 4, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மை​யில் அமைச்​சரவை கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதுகுறித்து வேலை​வாய்ப்பு துறை அமைச்​சர் அனில் ராஜ்பர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மாநில இளைஞர்​கள் உள்​நாடு மற்​றும் வெளி​நாடு​களில் வேலை​வாய்ப்பு பெறு​வதற்கு உதவும் வகை​யில், உ.பி. ரோஜ்கர் மிஷனை உரு​வாக்​கும் திட்​டத்​துக்கு அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. மூன்​றாம் தரப்பு ஆட்​சேர்ப்பு நிறு​வனங்​களை இளைஞர்​கள் சார்ந்​திருப்​பது இனி தவிர்க்​கப்​படும்.

ஆண்​டுக்கு 25,000 முதல் 30,000 வரையி​லான இளைஞர்​களை வெளி​நாடு​களுக்கு அனுப்​ப​வும், இந்​திய தனி​யார் துறை​யில் கிட்​டத்​தட்ட ஒரு லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பை வழங்​க​வும் நாங்​கள் இலக்கு நிர்​ண​யித்​துள்​ளோம். இந்​திய மனித வளத்​துக்​கான உலகளா​விய தேவை அதி​கரித்து வரு​கிறது. வெளி​நாட்டு வேலை​வாய்ப்​பு​களை இனி அரசே நேரடி​யாக ஏற்​பாடு செய்​யும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *