• July 4, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் உக்ரைன் விவகாரத்தில் மாஸ்கோ அதன் இலக்குகளை அடையாமல் பின் வாங்காது என்றும் ஆனாலும் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகக இருப்பதாகவும் தெரிவித்ததாக ரஷ்ய அரசு கூறியுள்ளது.

உக்ரைனுக்கு ஆயுதங்களை நிறுத்திய அமெரிக்கா!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் 4-வது ஆண்டாக நடைபெற்றுவருகிறது. சமீபமாக ரஷ்யா தாக்குதலை பல மடங்கு தீவிரபடுத்தி பெரிய அளவிலான வான் வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Putin – Trump

இதற்கிடையில் உக்ரைனுக்கு பீரங்கிகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதனால் புதின் மற்றும் ட்ரம்ப் இடையிலான பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ரஷ்யா பின்வாங்காது!

புதின் – ட்ரம்ப் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யாவின் வெளியுறவுத்துறை ஆலோசகர் யூரி உஷாகோவ், “எங்கள் அதிபர் ரஷ்யா அதன் இலக்குகளை நிச்சயம் எட்டும் எனக் கூறினார். அதாவது இந்த போரின் மூல காரணத்தை களையும் வரை ரஷ்யா பின்வாங்காது. எனினும் பேச்சுவார்த்தையைத் தொடரவும் தயாரக இருப்பதாக அவர் கூறினார்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Trump – Putin

மேலும் அவர், “ரஷ்யா தரப்பில் இருந்து, அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல் சூழ்நிலைகளை அரசியல் – இராஜதந்திர வழிமுறைகளால் மட்டுமே தீர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.” என ஈரான் பிரச்னை குறித்து புதினின் கருத்துகளை வெளிப்படுத்தினார்.

 அவசரமாக புறப்பட்ட Putin!

இந்த தொலைபேசி ஆழைப்பில் கலந்துகொள்ள அதிபர் புதின், தான் கலந்துகொண்டிருந்த மாநாட்டில் இருந்து பாதியிலேயே புறப்பட்டு வந்துள்ளார். “தயவு செய்து கோபப்படாதீர்கள். நாம் இன்னும் அதிகம் பேசவேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் (ட்ரம்ப்பை) காக்க வைப்பது சங்கடமாக இருக்கிறது. அவர் கோபப்படக் கூடும்” எனக் கூறி புறப்பட்டுள்ளார் புதின்.

ட்ரம்ப்பின்அயுதங்கள் வழங்குதலை நிறுத்தும் முடிவு உக்ரைன், ரஷ்ய ராணுவத்தின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகனைகளை எதிர்கொள்வதைக் கடினமாக்கியிருக்கிறது.

போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள புதின் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கும் யோசனையையும் புறக்கணித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவேன் என சபதம் எடுத்து ஆட்சியில் அமர்ந்த ட்ரம்ப்பின் இதுவரையிலான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *