
சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். அதேநேரத்தில், பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா ஆறுதல் கூற வந்தார். அப்போது தமிழரசி, அரசு சார்பில் வேலை, இடம் தருவதாகக் கூறினார். இதைக் கேட்ட திலகபாமா “இடம் கொடுத்தால் போதுமா? நீதி கிடைக்க வேண்டாமா? இதுவரை தமிழகத்தில் 24 காவல் மரணங்கள் நடந்துள்ளன. அதற்கு அரசு என்ன சொல்கிறது?” என்று கேட்டார். அப்போது தமிழரசி, “ஆறுதல் மட்டும் கூறிவிட்டுச் செல்லுங்கள்” என்று கூறினார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.