• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் மாநக​ராட்​சி, நகராட்​சிகளுக்கு உட்​பட்ட பகு​தி​களில் ரூ.52 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 208 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள், ரூ.60 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 50 ஊரக, நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: ‘நகர்ப்​புறங்​களில் மக்​கள் அதிக அளவில் அரசுப் பொது மருத்​து​வ​மனையை நோக்கி வரு​வ​தால், மருத்​து​வ​மனை​களில் கூட்​டம் அதி​க​மாகி வரு​கிறது. இந்த நிலையை மாற்​றி, ஒருங்​கிணைந்த, தரமான மருத்​துவ சேவை​களை மக்​களின் இருப்​பிடங்​களுக்கு அரு​கிலேயே வழங்​கும் நோக்​கில், சென்னை உள்​ளிட்ட 21 மாநக​ராட்​சிகள், 63 நகராட்சி பகு​தி​களில் 708 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள் ரூ.177 கோடி​யில் புதி​தாக அமைக்​கப்​படும்’ என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் கடந்த 2022-ம் ஆண்டு 110-வது விதி​யின்​கீழ் அறி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *