
சிவகங்கை: அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து போலீஸார் தாக்கியதை நான் நேரில் பார்த்தேன் என அவரது உறவினர் மகேஷ்குமார் தெரிவித்தார்.
அஜித்குமாரின் உறவினரான இவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கோயில் பின்புறமுள்ள மாட்டுதொழுவத்தில் வைத்து அஜித்குமாரை மூன்று போலீஸார் கொடூரமாக அடித்தபோது நான் அங்குதான் இருந்தேன். என்னிடம் அவர் அடிதாங்க முடியவில்லை என்று கதறினார். மேலும் அவர் பல முறை தண்ணீர் கேட்டார். நானும் தண்ணீர் கொடுக்க சொன்னேன். ஆனால் போலீஸார் மறுத்துவிட்டனர். பின்னர் தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து கொடுத்தனர். அதை அவரால் குடிக்க முடியவில்லை. வேறு தண்ணீர் கேட்டார். ஆனால் கொடுக்கவில்லை.