
சென்னை: திமுக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்ய மாட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்ட வட்டமாக தெரிவித்தார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். மதிமுகவில் நடைபெற்று வரும் செயல் வீரர்கள் கூட்டம் தொடர்பாக அவரிடம் தெரிவித்தேன். இந்த திமுக அரசுக்கு எதிராக எந்த பிரச்சினையிலும் ஒரு வார்த்தை கூட நான் விமர்சனமாக வைத்ததில்லை, வைக்கவும் மாட்டேன்.