
த்ராபித் பன்சால் என்ற இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் மெட்டாவின் சூப்பர் இன்டெலிஜன்ட் யூனிடில் இணைய, ஓபன் ஏஐ (சேட் ஜிபிடி) நிறுவனத்திலிருந்து விலகியிருப்பது தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும் சி.இ.ஓவுமான சாம் ஆல்ட்மேன், த்ராபித் பன்சால் மெட்டாவின் உயர் மட்ட ஆட்சேர்ப்பில் ஒருவராக இருப்பார் என்றும் அவர் மெட்டாவில் இணைவதற்கான போனஸாக 100 மில்லியன் டாலர் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியதாக தொழில்நுட்ப தளங்கள் தெரிவிக்கின்றன.
ஐஐடி கான்பூரில் படித்தவரான த்ராபித் 2022ம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தில் இணைந்துள்ளார். இவர் அங்கு செல்வாக்குமிக்க ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார் என டெக் சர்ச் தளம் தெரிவிக்கிறது.
யார் இந்த த்ராபித் பன்சால்?
கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளை ஆழமாக பயின்றுள்ளார் த்ராபித்.
natural language processing (NLP), டீப் லேர்னிங் மற்றும் மெட்டா லேர்னிங் உள்ள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
ஐஐடி கான்பூரில் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அங்கேயே முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
படிக்கும் காலத்திலேயே ஐஐஎஸ்சி பெங்களூரு, பேஸ்புக், கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் ஆய்வுகளில் இன்டெர்ட்ன்ஷிப் செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார் த்ராபித்.
2017ம் ஆண்டு ஓபன் ஏஐயில் இன்டெர்ன்ஷிப் பணியை மேற்கொண்ட இவர், அதே நிறுவனத்தில் முதல் முழு நேர வேலையிலும் சேர்ந்துள்ளார். அங்கே முக்கிய திட்டங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
த்ராபித் பன்சால் மற்றும் சில ஆராய்ச்சியாளர்களை ஓபன் ஏஐயிலிருந்து தங்கள் நிறுவனத்தில் சேர்க்க 100 மில்லியன் டாலர் வழங்கப்படுவதாக சாம் அல்ட்மேன் குற்றம்சாட்டியுள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் தரப்பில் இந்த கூற்றை மறுத்துள்ளனர். ஆல்ட்மேன் மிகைப்படுத்திக் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர்.