• July 3, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது குழந்தைகளுடன் வியாழக்கிழமை (ஜூலை 3) மாலை வந்தனர். பழநி அடிவாரத்தில் இருந்து ரோப் காரில் மலைக் கோயிலுக்கு சென்றனர். அங்கு, அவர்களை கோயில் அதிகாரிகள் வரவேற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *