
சென்னை: “ரியல் எஸ்டேட் என்ற பெயரில், விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைக்கும் வேலைகள் தொடங்கப் பட்டிருப்பது ஆபத்தான போக்கு. இதை இனிமேலும் தொடரவிடுவது நாட்டுக்கும், விவசாயத்துக்கும் நல்லதல்ல. போர்க்கால அடிப்படையில் இதற்கு விரைந்து தீர்வு காண முதல்வர் முன்வர வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களை ஈர்க்கும் விதமாக அதற்கான விளம்பரங்களுக்கு மட்டுமே லட்சக்கணக்கில் ரூபாய்களை கொட்டுகிறார்கள். அதிலும் ஒழுங்குமுறை அறவே இல்லை. ஒரே இடத்துக்கு முப்பது நபர்கள் 'பட்டா' (Approved) வாங்கி வைத்திருக்கிறார்கள். முப்பது நபர்களுக்கு விற்றும் முடிக்கிறார்கள். அரசாங்கம் இதை தீவிரமாய் கவனத்தில் கொண்டால் ரியல் எஸ்டேட் மோதல்களும் படுகொலைகளும் நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம்.