
பாட்னா: பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி முதல்வர் பிரதிக்யா யோஜனா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி அல்லது பிளஸ் 2 முதல் பட்டமேற்படிப்பு வரை முடித்துள்ள 18 முதல் 28 வயது வரையிலான இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையுடன் 3 முதல் 12 மாதங்கள் வரை தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.
இந்த ஆண்டு 5 லட்சம் பேருக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ரூ.685.76 கோடி செலவிடப்படும். சீதை பிறந்த இடமாக கருதப்படும் சீதாமர்கியில் உள்ள ஜானகி கோயிலை முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றிடும் வகையில் ரூ.882.87 கோடியில் மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்படும்.