
பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவை மாற்றக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் மேலிடத் தலைவரிடம் புகார் அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.