
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் 1,000 கிலோ மாட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அசாம் ஐஜிபி (சட்டம் ஒழுங்கு) அகிலேஷ் குமார்சிங் கூறுகையில், “செவ்வாய்க் கிழமை இரவு மாநிலம் முழுவதும் 112 உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் 1,084 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். துப்ரி, கோல்பாரா, லக்கிம்பூரில் உள்ள கோயில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி விற்ற 150-க்கும் மேற்பட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இது அமைதியின்மையை உருவாக்கும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியிருந்தார்.