
புதுடெல்லி: 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தன்னுடைய மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்று புத்த மதகுரு தலாய் லாமா முறையாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தலாய் லாமா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஜூலை 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: செப்டம்பர் 24, 2011 அன்று, திபெத்திய ஆன்மிக மரபுகளின் தலைவர்கள் கூட்டத்தில் நான் ஓர் அறிக்கை வெளியிட்டேன். திபெத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள சக திபெத்தியர்கள், திபெத்திய பவுத்தத்தைப் பின்பற்றுபவர்கள், திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கான அந்த அறிக்கையில், தலாய் லாமாவின் அறக்கட்டளை தொடர வேண்டுமா என்று கேட்டிருந்தேன்.