
நாக்பூர் கட்டோலைச் சேர்ந்த 25 வயது இளைஞர், 17 வயது சிறுமியின் கைகளை பிடித்து இழுத்து ’ஐ லவ் யூ’ சொன்னதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு 2017 ஆம் ஆண்டே வழங்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதிகள் அந்த இளைஞரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அந்த இளைஞர் மேல்முறையீடு செய்து ஜாமினில் வெளிவந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
என்ன நடந்தது?
பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பெண்ணின் கையைப் பிடித்து “ஐ லவ் யூ” என்று சொன்னதற்காக 25 வயது இளைஞர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு போடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நீதிமன்றம் அந்த இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த இளைஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் அமர்வு நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் நோக்கத்தோடு சிறுமியை தொட்டதற்கான எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை எனவும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.
மேலும் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக ஐ லவ் யூ என்று சொல்வது பாலியல் நோக்கம் இல்லை என்று கூறி சிறை தண்டனை ரத்து செய்துள்ளார்.