
புதுடெல்லி: டிஜிட்டல் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இத்திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன், இந்தியா மிகுந்த நம்பிக்கையுடன் அறியப்படாத பிரதேசத்தில் ஒரு துணிச்சலான பயணத்தை தொடங்கியது.