
சென்னை: தமிழகத்தில் தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தில் வீட்டு மின்நுகர்வோரைத் தவிர தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிஃப்ட், உடற்பயிற்சிக் கூடம் போன்றவற்றை உள்ளடக்கிய பொது சேவை பிரிவுக்கு யூனிட் ரூ.8.55-இல் இருந்து ரூ.8.80-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. குடிசை தொழில், குறுந்தொழில்களுக்கு, 500 யூனிட் வரை யூனிட் ரூ.4.80-ல் இருந்து ரூ.4.95-ஆகவும்; 500 யூனிட்டுக்கு மேல் ரூ.6.95-ல் ரூ.7.15-ஆகவும் அதிகரித்துள்ளது. விசைத்தறிக்கு 500 யூனிட் வரை ரூ.6.95-ல் இருந்து ரூ.7.15-ஆக அதிகரித்துள்ளது.