
தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் 67,68,69,70 ஆகிய வார்டுகளில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு நிலைய இயந்திரத்தை சரி செய்து தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி மாடம்பாக்கம் பேரூராட்சியாக இருந்த போது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர், மாநகராட்சியாக மாற்றப்பட்டது.
தற்போது 67,68,69,70 வார்டுகள் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பழுதானதால் மீண்டும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அனைத்து பகுதிகளிலும் குடிநீர் மாசடைந்ததால் பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.