
சத்தியமங்கலம் – மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையை கடக்க இடைவெளி விடாமல், நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் ஒருவழிப்பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது.
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஈரோடு – கோபி – சத்தியமங்கலம் வழியாக மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியானது, ஈரோட்டில் இருந்து சித்தோடு வரையிலான 8.13 கிமீ தூரம் ஒரு திட்டப்பணியாகவும், சித்தோடு முதல் கோபி வரையிலான 30.60 கிமீ தூரமுள்ள நான்கு வழிச்சாலைப் பணிகள் ஒரு திட்டமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.