
மதுரை: மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இறந்த அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.