
சென்னை: “என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்” என்று சொல்கிறீர்களே… போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா? வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம். கொலை செய்தது உங்கள் அரசு.
‘சாரி’ (SORRY) என்பதுதான் உங்கள் பதிலா? அஜித்குமார் இருந்ததால்தான் அந்தக் குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, “தைரியமாக இருங்கள்” என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு? முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே?