
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.