
சென்னை: அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ள ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”பாஜக மத்திய அரசு அறிவித்த ரயில் கட்டண உயர்வு ஏழை மக்களை, குறிப்பாக அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறி, அதனை திரும்பப் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகள், ரயில் பயணிகள் சேவை அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு எந்த வித மாறுதலும் இல்லாமல் இன்று முதல் ஜூலை 1ம் தேதி ரயில் கட்டண உயர்வை அமலாக்கியுள்ளது.