
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை திமுக உறுப்பினர்களாக இணைக்க உள்ளோம்.
புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை
தமிழக இளைஞர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள். புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை. யார் சென்றாலும் துணை முதலமைச்சர் சந்திப்பார். அந்த வகையில்தான் தவெகவில் இருந்து திமுக வந்த வைஷ்ணவி உள்ளிட்டோரை சந்தித்தார்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அப்போதை முதலமைச்சர் சொன்னார். நம் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருக்கிறது.
மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்களுக்காக 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்களை இப்போது காணவில்லை. அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை, முதலமைச்சர் ஸ்டாலின் மீட்டுக் கொண்டிருக்கிறார்.
2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னவர்கள், இப்போது அதே பாஜகவுடன் அமைதியாக உட்கார்ந்துள்ளனர். டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் அதை சாப்பிட்டு கொண்டிருந்திருப்பார்கள். கோவையில் சுமார் 1,364 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ரூ .417 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நேரத்தில் வைத்துள்ள செயல்திட்டங்களை உங்களிடம் எப்படி சொல்ல முடியும். நாங்கள் தேர்தல் களத்தை எப்போதோ தொடங்கி விட்டோம். கோவை மாவட்டம் திமுகவின் கோட்டை. இங்கு திமுகதான் இங்கு வெற்றி பெறும்.” என்றார்.