
லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் ‘மார்கன்’.
இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ” ‘மார்கன்’ திரைப்படம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
படத்தின் முதல் Frame தொடங்கி திரைப்படம் முழுவதும் நம்மை த்ரில்லருக்குள் அழைத்து செல்கிறது. இப்படத்தை திரையரங்கில் பார்க்கத் தவறாதீர்கள்.
அசத்தலான அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் படத்தை நன்றாக இயக்கி இருக்கிறார். அவர்தான் எனது முதல் படமான ‘பீட்சா’வின் தொகுப்பாளர். விஜய் ஆண்டனியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…