• July 1, 2025
  • NewsEditor
  • 0

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த இந்து சமயப் பிரசாரகர் ராம ரவிக்குமார் என்பவர், “இந்து சமய அறக்கொடைகள் சட்டத்தில் பிரிவு 66-ல் கோயிலின் உபரிநிதியை இந்து ஆகம விதிகளைக் கற்றுக் கொடுக்கவும் நலிவடைந்த கோவில்களை மேன்மை அடைய செய்யும் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியுள்ளது.

ஆனால் அதற்கு மாறாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுப் பல கோயிலில் உள்ள உபரி நிதிகளை எடுத்து ஆங்காங்கே திருமண மண்டபங்கள் கட்டுவது வணிக வளாகங்கள் கட்டுவது ரிசார்ட்டுகள் கட்டுவதற்குப் பயன்படுத்த நினைக்கின்றனர்.

பழனி முருகன் கோயில்

தமிழக சட்டமன்றம் வெளியிட்டுள்ள அரசாணையின்படி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான ரெட்டியார்சத்திரம் கொத்தபுள்ளி என்ற கிராமத்தில் 9 கோடி 80 லட்சம் செலவில் கல்யாண மண்டபம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களின் துறை ரீதியான அனுமதி வழங்கப்பட்டு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது

மண்டபம் கட்டுவதற்கு பூமி பூஜை போட்ட போது

இதற்கு முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் திருக்கோயில் நிதியை தவறாக செலவு செய்யக் கூடாது எனவும், திருக்கோயில்களில் நிதி இருக்கிறது என்பதற்காக திருமண மண்டபம் கட்டுவது, வணிக வளாகங்கள் கட்டுவது போன்றவை தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று அதற்கு தடை போட்டது.

அந்த தடையை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை மேல்முறையீடு செய்து மனு தாக்கல் செய்த போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் தலையிட முடியாது என்று இந்துசமய அறநிலையத்துறையின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது .

ராம ரவிக்குமார்

மேற்படி உத்தரவுகளின் படி தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மதுரை உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது மனுவை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், “பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிதியிலிருந்து 9 கோடி 80 லட்சம் ரூபாயில் கல்யாண மண்டபம் கட்டும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடைவிதித்து’ வழக்கை ஒத்தி வைத்தது’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *