• July 1, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள கோகுலேஸ் பட்டாசு ஆலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. வெடி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சாத்தூர் நகர் போலீஸார் பட்டாசு ஆலை போர்மேன் ரவி (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி – சாத்தூர் இடையே உள்ள சின்னகாமன்பட்டியில் கமல் குமார் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ( பெசோ) உரிமம் பெற்று கோகுலேஸ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *