
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரே ஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, இந்திய எல்லைகளை கண்காணிக்க 52 செயற்கைக் கோள்களை ஏவும் பணியைதீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மத்திய அரசு நடத்தியது. இந்நிலையில், இந்திய எல்லைகள் மற்றும் எதிரி நாடுகளின் நிலப்பரப்புகளை தொடர்ந்து கண்காணிக்க 52 கண்காணிப்பு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.