
`கலக்கப் போவது யாரு’, `குக்கு வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.
தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளைப் படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வருவது மூலமும் மக்களின் மனங்களை பாலா கவர்ந்து வருகிறார்.
தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
நேற்று ( ஜூன் 30) இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியானது. பாலா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘காந்தி கண்ணாடி’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 1) சென்னை ராணிப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாலா, “எல்லோருக்கும் பிடித்த படமாக ‘காந்தி கண்ணாடி’ படம் இருக்கும்.
அந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் சம்பளத்தில்தான் இன்று இரண்டு குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

நான் படம் நடிப்பதற்கு முக்கியக் காரணம் தமிழ் மக்கள் போட்ட பிச்சைதான். அதற்கு நான் என்றைக்கும் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த பட வாய்ப்பு மக்களால்தான் எனக்குக் கிடைத்தது. மக்கள் இல்லை என்றால் நான் இங்கில்லை. எனது மூச்சு இருக்கும் வரை மக்களுக்குச் சேவகனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் நிறைய உதவிகளை மக்களுக்குச் செய்வேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…