
திருச்சி / சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
திருச்சியில் முப்படை ஓய்வூதியர்களுக்கான மாபெரும் குறைதீர் கூட்டத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவினர் தோல்வி பயத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மூலம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம். முதல்வர் செயல்படாததன் விளைவாக லாக்கப் மரணம் நடந்துள்ளது.