• June 29, 2025
  • NewsEditor
  • 0

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் (Toxic Relationship). 2 கே கிட்ஸ் மத்தியில் அதிகம் பேசப்படுகிற ஒரு வார்த்தை. அதென்ன டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்? சிம்பிளாக சொன்னால், நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிற நபருடன் நேரம் செலவழித்த பிறகு மகிழ்ச்சியாக உணர்ந்தீர்களென்றால், அது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் இல்லை. இதற்குபதில், உற்சாகமெல்லாம் வடிந்துவிட்டதுபோல உணர்ந்தீர்களென்றால், நீங்கள் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது சாம்பிள் மட்டுமே… எவையெல்லாம் Toxic Relationship ரிலேஷன்ஷிப்புக்கான அறிகுறிகள் என மேரேஜ் அண்ட் ஃபேமிலி தெரபிஸ்ட் வர்ஷா சாமியிடம் பேசினோம்.

ரிலேஷன்ஷிப்

கருத்து பரிமாற்றங்களைப் போலவே கருத்து மோதல்களும் ரிலேஷன்ஷிப்பில் சகஜம்தான். இந்த மோதல் தரும் பாதிப்பிலிருந்து சம்பந்தப்பட்டவர்கள் சுலபமாக வெளிவந்து விடுவார்கள். அதன்பிறகும் அவர்களிடையே லவ், டேட்டிங் எல்லாம் வழக்கம்போலவே இருக்கும். இதுதான் ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப். இந்த சகஜ நிலைமை உங்கள் காதலில் இல்லையென்றால், அது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பாக இருப்பதற்கோ அல்லது மாறுவதற்கோ வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம்.

Toxic Relationship
பெண்கள் ஏன் ‘Toxic Relationship-ல இருக்காங்க?!

இரண்டு பேர் நேசிக்கிறார்கள். திடீரென ஒரு பிரச்னை வருகிறது. அடுத்த நாளிலிருந்து அதில் ஒருவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. வாட்ஸப்பில் பிளாக் செய்கிறார். ஃபேஸ்புக்கில் அன்ஃபிரெண்ட் செய்கிறார். போனையும் எடுக்காமல் இருக்கிறார். மொத்தத்தில், பிரச்னைக்கு முன்பு வரைக்கும் தன் மீது தன் காதலன்/காதலிக்கு இருந்த நம்பிக்கையை உடைத்திருப்பார். தவிர்க்கப்பட்ட நபரோ மிகுந்த காயப்பட்டிருப்பார், ‘என்னச்சோ’ என்று பயந்துகொண்டிருப்பார். டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இது மிக மிக மோசமான வகை. இப்படிப்பட்ட ஆணால்/பெண்ணால் பாதிக்கப்பட்டவர் அடுத்தொரு ரிலேஷன்ஷிப்பில் ஈடுபடவே பயப்படுவார். அப்படியே ஈடுபட்டாலும் முன்போலவே பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் எந்நேரமும் பாதுகாப்பின்மை உணர்வுடனே இருப்பார். ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் அடுத்து வருகிற உறவையும் எந்த அளவுக்குப் பாதிக்கிறது பாருங்கள்.

தன் காதலன்/காதலி, தன்னை உண்மையாகக் காதலிக்கிறாரா என்பதை விதவிதமாக பரிசோதித்துக்கொண்டிருப்பார்கள். தன்னிடம் அடிக்கடி ஐ லவ் யூ சொன்னால்தான் உண்மையான காதல், தான் கூப்பிடுகிற இடத்துக்குச் சொன்ன நேரத்துக்கு வந்தால்தான் உண்மையான காதல் என்று இந்தப் பரிசோதனைகள் நீளும். பெரும்பாலான உறவில் இந்த பரிசோதனைகள் இருக்கிறது என்றாலும், கொஞ்சம் அசந்தாலும் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பாகி காதலன்/காதலியைக் கஷ்டப்படுத்தி விடும்.

Relationship
Relationship

வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் தன்னுடைய காதலை இயல்புக்கு அதிகமாகவே வெளிப்படுத்துவார்கள். ஆனால், திடீரென கோபம் வந்துவிட்டால் எல்லாம் போச்சு… இறுக்கமாகி விடுவார்கள், கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆனால், காரணத்தைச் சொல்லவே மாட்டார்கள். தன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு எதிரிலிருப்பவரையும் காயப்படுத்துவார்கள். கடைசி வரை என்னப் பிரச்னை என்பதை மட்டும் சொல்லவே மாட்டார்கள். டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இதுவும் மோசமான வகையே. இந்த வகை டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் இந்த தலைமுறை மத்தியில் அதிகமாக இருக்கிறது.

தன்னுடைய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாமல், தன் காதலனை/காதலியை ‘நீ தப்பா புரிஞ்சிட்டிருக்கே’ என்று பேச ஆரம்பிப்பார்கள். துணையின் மெல்லிய உணர்வுகளையும், எண்ணங்களையும், தன்னுடைய உணர்வுகள் மற்றும் எண்ணங்களைத் தெரிவிப்பதன் மூலம் ஆக்கிரமிப்பார்கள். காலப்போக்கில், காதலன்/காதலி ‘நம்மதான் தப்போ’ என்று யோசிக்க வைத்து விடுவார்கள்.

வர்ஷா சாமி

காதலன்/காதலியை எதற்கெடுத்தாலும் ‘இது தப்பு; அது தப்பு’ என்று குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் செய்யும் எல்லா செயல்களிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். டாக்ஸிக்கில் இதுவொரு வகை.

காதலில் சண்டை வருவது சகஜம்தான். ஆனால், சண்டையை வெளிப்படுத்தும் விதம்தான் உங்கள் ரிலேஷன்ஷிப் ஆரோக்கியமாக இருக்கிறதா, டாக்ஸிக்காக இருக்கிறதா என்பதை வெளிப்படுத்தும். சின்னச் சின்ன சண்டைகளில்கூட சிலர் கெட்ட வார்த்தைகளை இறைத்து விடுவார்கள். கவனம், இதுவும் காலப்போக்கில் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பாக மாறலாம்.

உங்கள் மகிழ்ச்சியையும் வாழ்க்கையையும் காதலன்/காதலி பாதிக்கிறார் என்றால், அது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்தான். காலத்தே அதைக் கண்டறிந்து மீண்டு வந்துவிடுவதுதான் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் பாதுகாப்பு’’ என்கிறார் வர்ஷா சாமி!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *