• June 29, 2025
  • NewsEditor
  • 0

கனடாவில் ஒரு வேலைவாய்ப்பு முகாமில் 5 அல்லது 6 இன்டெர்ன்ஷிப் இடங்களுக்கு இந்தியர்களும், மற்ற வெளிநாட்டு மாணவர்களும் நீண்ட வரிசையில் நிற்பதை இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்திருப்பது வைரலாகியிருக்கிறது.

அந்த வீடியோவில் நீண்ட வரிசையில் நிற்பவர்களைக் காண்பித்து அப்பெண், “கனடாவில் நிறைய வேலைவாய்ப்பும், பணமும் இருப்பதாக நினைக்கும் நமது இந்திய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த வீடியோவைக் காட்டுங்கள்.

இதுதான் கனடாவின் ரியாலிட்டி. இதற்கு நீங்கள் தயராக இருந்தால் கனடாவுக்கு வாருங்கள். இல்லையெனில் இந்தியாவே சிறந்தது.” என்று கூறுகிறார்.

கனடாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையைப் பிரதிபலிக்கும் வகையில் வைரலாகியிருக்கும் இந்த வீடியோவுக்கு இணையதளவாசிகள் பலரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒருவர், “இங்கே டொராண்டோவிலும் இதே நிலைமை” என்று பதிவிட, மற்றொரு இணையதளவாசி, “எதார்த்தத்தைப் பார்க்கும் வரை இது நிறைய வேலைவாய்ப்புள்ள நாடு என்று எல்லோரும் நினைக்கிறார்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இன்னொருவர், “மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்தும் வீடியோ. கனடாவுக்கு செல்வதற்காக சிலர் மக்களுக்கு தவறான தோற்றத்தையும், தகவல்களையும் அளிக்கின்றனர்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

கனடா தேசியக் கொடி

அதேபோல் வேறு சில பயனர்களும், “இது மிகைப்படுத்தப்பட்டது. எங்கு சென்று பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்தால், நிறைய வேலைகள் இருக்கின்றன” என்றும், “வான்கூவரில் வேலைகள் உள்ளன. இங்கு பிரச்னை என்பது வேலைவாய்ப்பின்மை அல்ல, அந்தந்த வேலைகளுக்கான தகுதி பொருத்தமின்மைதான். இதற்கு ஒரு நகரத்தையே, நாட்டையோ குறை கூறுவது சரியல்ல” என்றும் பதிவிட்டிருக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *