
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து, சிறையில் அடைப்பது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதைத் தடுக்க தொடர்ந்து கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன.
இந்த நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களைப் பிடிப்பதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் ஜெய்சங்கர் பேசியதாவது…
“இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் செய்தியை அடிக்கடி கேட்டு வருகிறோம். இதற்கு அவசர நிலையின்போது, இந்தியா, இலங்கையுடன் போட்டுக்கொண்ட சர்ச்சைக்குரிய ஒரு ஒப்பந்தமே காரணம்.
இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியா நம்மிடம் இருந்த சில மீன்பிடி உரிமைகளை இலங்கை விட்டுக்கொடுத்து விட்டது.
அந்தக் காலக்கட்டத்தில் நாடாளுமன்றம் சரியாக இயங்கியிருந்தால், இந்த ஒப்பந்தமே ஏற்பட்டு இருக்காது.
இந்த ஒப்பந்தத்தின் விளைவு இன்னமும் தமிழ்நாட்டில் எதிரொலித்து கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.