• June 26, 2025
  • NewsEditor
  • 0

“வகுப்பறை இல்லை, சீருடை இல்லை, தினமும் பள்ளி செல்ல வேண்டியதில்லை… உலகம் மட்டுமே அவர்களின் பாடம்” என்று தங்களின் மூன்று பெண் குழந்தைகளை வழக்கமான கல்வி பயிலும் நிலையில் இருந்து மாற்றியுள்ளனர் அமெரிக்க தம்பதியினர்.

அமெரிக்கா ஃபுளோரிடாவைச் சேர்ந்த டயானா மற்றும் ஸ்காட் பிளிங்க்ஸ் தம்பதியினர் தங்களது மூன்று மகள்களையும் உலகக் கல்வி கற்பித்து வருகின்றனர்.

இவர்கள் தினமும் வகுப்பறைக்குச் சென்று பாடம் கற்றுக் கொள்வதில்லை மாறாக ஒரு கண்டம் விட்டு கண்டம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வாழ்க்கை பாடம் படிக்கின்றனர்.

தேர்வு இல்லை, வீட்டுப்பாடம் இல்லை, வகுப்பறை இல்லை, சீருடை இல்லை.. ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அந்தந்த நாட்டின் கலாசார மொழிகளை கற்றுக்கொள்கின்றனர்.

லூசில் (12), எடித் (11) மற்றும் ஹேசல் (9) என்ற மூன்று பேர் ஏதென்ஸில் கிரேக்க புராணங்களைக் கற்றுக்கொள்கிறார்கள், ஸ்பெயினில் ஃபிளமெங்கோ நடனத்தைப் பயிற்சி செய்கிறார்கள், மாண்டினீக்ரோவில் கடல் பாதுகாப்பை ஆராய்கிறார்கள். இப்படி உலகம் முழுவதும் சுற்றி வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்கின்றனர்.

இது குறித்து டயானா கூறுகையில், “எங்களது மகள்கள் புத்தகத்தில் இருந்து மட்டும் இல்லாமல், வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. அப்போது எங்களது மகள்கள் வீட்டில் இருந்து, கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிலிருந்து இந்த எண்ணம் எங்களுக்கு தோன்றியது. தற்காலிகமாக இருந்ததை நிரந்தர வாழ்க்கை முறையாக மாற்ற நாங்கள் நினைத்தோம்.

வீட்டில் இருந்து கற்றுக் கொள்வது எவ்வளவு மகிழ்ச்சிகரமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது, வீடுதான் முழு உலகமாக இருந்தால்.. என்று உலகம் முழுவதும் உலக கல்வி பயில தங்களது மகள்களை அழைத்துக்கொண்டு பயணிக்க தொடங்கிவிட்டோம்” என்கின்றனர், இந்த அமெரிக்க தம்பதியினர்.

அப்போதிருந்து, பிளிங்க்ஸ் குடும்பம் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளது. ஐஸ்லாந்து, தாய்லாந்து, போர்ச்சுகல், மொராக்கோ மற்றும் இப்போது உருகுவே போன்ற பல்வேறு இடங்களில் வசித்து வருகிறது. அவர்களின் முதல் ஆண்டில் மட்டும், கோஸ்டாரிகா, மெக்சிகோ உட்பட 22 நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *