• June 26, 2025
  • NewsEditor
  • 0

‘எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3BHK’.

சென்னை போன்றதொரு பெரு நகரில் சொந்த வீடு வாங்கப் போராடும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கைக் கதைதான் இந்தத் திரைப்படம். அம்ரித் ராம்நாத் இசையமைத்திருக்கிறார்.

சித்தார்த், ராம், அருண் விஷ்வா, மாரிசெல்வராஜ்

இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம், மாரிசெல்வராஜ், ரவிமோகன், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த், ‘கொட்டுக்காளி’ வினோத்ராஜ், ‘அயலான்’ ரவிக்குமார், ‘அயலி’ முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் பேசியிருக்கும் நடிகர் ரவிமோகன், “இந்தப் படம் சொந்த வீடு இல்லாதது பத்தி பேசுது. நான் சொந்தவீட்டிலதான் பிறந்தேன், வளர்ந்தேன். ஆனால், இப்போ வாடகை வீட்டில்தான் இருக்கேன். அதனால இந்தப் படத்தோட உணர்வுப்பூர்வமாக என்னை தொடர்புப்படுத்திக்க முடிஞ்சது. இனி புத்துயிர்போட வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறேன். அந்த ஊக்கத்தை இந்தப் படம் எனக்குக் கொடுத்திருக்கு.

ரவிமோகன்

மனதிற்கு நெருக்கமான, இலகுவான, அற்புதமான திரைப்படம் இது. நல்ல மிகப்பெரிய வரவேற்பைப் பெற வேண்டிய படம் இது. எல்லாரும் பாருங்க.” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *