• June 26, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அன்புள்ள அம்முடிக்கு…

அம்மோய் நான் தான் உன் புள்ள ம்ம் உன் செல்ல புள்ள மோசக்குட்டி, நல்லா இருக்கீயா மா.. நைனா நல்லாருக்கா மா… அப்பறம் நம்ப கருப்பேன் அதன் என் ஆட்டுக்குட்டி எப்டி இருக்கான், நான் இல்லாம சரியா மேய்ச்சலுக்கு கூட போயிருக்க மாட்டான்ல அதுள்ளாம எதுத்த வீட்டு பூனாச்சி எப்டி இருக்கானோ என் காலே உலகம்னு சுத்திட்டு இருந்தான் இப்போ நா இல்ல என்ன பண்றானோ எனக்கு உங்க நெனப்பாவே இருக்குமா…

இங்க நா நல்லா இருக்கேன் மா ஆனா… நம்ப ஊரு பேச்சுவழக்கு மாரி தான் எதும் இல்ல மா… எல்லாம் புதுசா பாக்குற மாரியே இருக்கு மா, கொஞ்ச நாளாச்சினா எல்லாம் பழகிடும்ல மா… நான் நல்லா இருக்கேன், நீ ஒன்னும் கவலப்படாத மா.. நீ ஒரு நாள் வா மா நிய்யி நைனா அப்பறம் நம்ப கருப்பேன், பூனாச்சியலாம் கூட்டிடு வா மா..

பக்கத்துல தான் மெரினா பீட்ச் இருக்காம் எனக்கு தனியா போக பயமா இருக்கு என் பிரண்ட்ஸ்-லாம் போயிட்டு சுண்ட கடலை வாங்கி சாப்பிட்டு சுத்தி பாத்துட்டு வருவாங்க.. ஒரு நாள் நம்ம போவோமா மா. நேரடியா கடல் அலைய பாக்க முடியுமா என் ப்ரண்ட்ஸ் சொன்னாங்க மா.. சரி மா நீ உன் உடம்ப பாத்துக்கோ நேரத்துக்கு பிரஸ்சர் மாத்திர போடுமா, வெயில போகாதமா சீக்ரமா நா படிச்சி டாக்டரா வந்து நம்ப ஊர்ல இருக்க எல்லாருக்கும் இலவசமா சிகிச்சை பக்குறேன்..

மறக்காம எல்லாரையும் கேட்டதா சொல்லுமா..

இப்படிக்கு நா தான் உன் புள்ள.. மோசக்குட்டி என்கிற விஜி..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *