
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிகுடு சிகுடு’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாடல் எப்படி? – டி.ராஜேந்தரின் சிக்னேச்சர் ஸ்டைலில், அவரது குரலில் ஒலிக்கும் தாளத்துடன் இப்பாடல் தொடங்குகிறது. ‘ஹே நவ்ருடா டேய்… சவுண்டை ஏத்து.. தேவா வாரான்டே…’ என்ற வரிகளுடன் பாடல் துவங்குகிறது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத் உடன், ராப் பாடகர் அறிவு மற்றும் டி.ராஜேந்தர் இணைந்து பாடலை பாடியுள்ளனர். பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் குரலில் அந்த தாளநடை வந்துகொண்டே இருக்கிறது.