• June 25, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: மதுரை முருக பக்​தர்​கள் மாநாட்​டில் திரா​விடம் குறித்த கருத்​துகள் மற்​றும் வீடியோ​வைத் தவிர்த்​திருக்க வேண்​டும் என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி. தினகரன் கூறி​னார். சேலத்​தில் அமமுக செயல் வீரர்​கள் கூட்​டம், மாவட்​டச் செய​லா​ளர் எஸ்​.கே.செல்​வம் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சிறப்பு அழைப்​பாள​ராக பங்​கேற்ற டிடி​வி.​தினகரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மதுரை முருக பக்​தர்​கள் மாநாட்​டுக்கு இந்து முன்​னணி, ஆர்​எஸ்​எஸ் மற்​றும் பாஜக சார்​பில் அழைப்பு விடுத்​தனர். ஆனால், வேலை காரண​மாக மாநாட்​டுக்கு செல்​ல​வில்​லை. இந்த மாநாட்​டில் திரா​விடம் குறித்த கருத்​துகள் மற்​றும் வீடியோ​வைத் தவிர்த்​திருக்க வேண்​டும். இது வருத்​தமளிப்​ப​தாக உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *