• June 24, 2025
  • NewsEditor
  • 0

பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தின் ஸ்டீலர் காட்சி வெளியகி ரசிகர்கள் வ்ரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் விஜய்யின் கைகளை எக்ஸ் வடிவில் வைத்து டாடா காட்டும் ஸ்டைலை நகைச்சுவையாக காப்பி செய்திருக்கிறார் ராஜு.

என்ன சொன்னார் Vijay?

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் வாழ்த்தியதாக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராஜு. “அன்புக்குரிய தளபதி விஜய் அண்ணாவிடம் இருந்து கால் வந்தது. “வேற லெவல்ப்பா… உண்மையாகவே தியேட்டரில் பார்க்கணும் எனத் தோன்றியது” என்றார்.

வேறு என்ன வேண்டும் எனக்கு?

நான் இன்று தளபதியை சிரிக்க வைத்திருக்கிறேன். இது எனக்கு மிகப் பெரிய விஷயம்…. நன்றி தலைவா!” என ட்வீட் செய்துள்ளார்.

“என் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்க வேண்டிய நாள்!” என இன்ஸ்டாவில் நெகிழ்ந்துள்ளார் ராஜு.

இதுவரை சின்னத் திரை நிகழ்ச்சிகளிலும், வெள்ளித்திரையில் சிறிய கதாபாத்திரங்களிலும் தோன்றிய ராஜு, முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார்.

2்கே கிட்ஸின் காதல், நட்பில் உள்ள குழப்பங்கள் பற்றி கலகலப்பாக பேசும் படமாக இது இருக்கும் என விகடன் பேட்டியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.

பன் பட்டர் ஜாம் படத்தில், ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிகா என இரு நாயகிகள் இடம்பெற்றுள்ளனர். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஏதோ பேசதானே, தியா தியா பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியிருக்கின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *