• June 24, 2025
  • NewsEditor
  • 0

தன் உடலை நேசிக்காதவர்களும், தன் உடல் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதவர்களும் தாம்பத்திய உறவில் ஆர்கசம் அடைவதில் சிக்கல் ஏற்படலாம் என்கிறார், சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். அது எப்படி என்று அவரிடம் கேட்டோம்.

Sex education

”உச்சக்கட்டம் அல்லது ஆர்கசம் என்கிற வார்த்தைகூட தெரியாமல் இருந்தது ஒருகாலத்து தலைமுறை. அது தெரிந்த பிறகும், அது ஆண்களுக்கான விஷயம்போலவே இருந்து வந்தது. செக்ஸில் ஆர்வம் காட்டுகிற பெண்கள் மோசமான கேரக்டர் என்கிற பொதுபுத்தியும் சமூகத்தில் இருந்தது. இப்போதும் இதன் மிச்சம் நம் குடும்பங்களில் இருக்கவே செய்கிறது. ஆனால், கடந்த 10 வருடங்களில் செக்ஸ் ஆபாசம், அசிங்கம் என்கிற பிற்போக்கு எண்ணங்கள் வேக வேகமாக மாறிக்கொண்டே வருகிறது. இது மிக மிக ஆரோக்கியமான விஷயம். இந்த நேரத்தில், ஒரு கணவனும் மனைவியும் ஆர்கசம் அடைவதைத் தடை செய்யும் ஒரு விஷயத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்றவர் தொடர்ந்தார்.

”எல்லா காலத்திலும் பெரும்பாலான ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, தங்களுடைய அந்தரங்க உறுப்பு குறித்த ஏதோவொரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். உதாரணத்துக்கு, சில சம்பவங்கள். அவர்களுக்கு திருமணமான புதிது. உறவின்போது, கணவரை பிரெஸ்ட்டை மட்டும் தொட விடாமல் தடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார் மனைவி. அது பிடிக்கவில்லையா; அங்கே ஏதாவது பிரச்னையா என்று கணவர் வற்புறுத்திக் கேட்ட பிறகுதான், ‘தன்னோட பிரெஸ்ட் சிறியதாக இருப்பதால்தான் அப்படி தடுத்ததாகத்’ தெரிவித்திருக்கிறார்.

Sex education
Sex education

இன்னொரு சம்பவத்தில், மார்பகக்காம்பைச் சுற்றி ரோம வளர்ச்சி அதிகமாக இருந்ததால், அந்தப் பெண் கூச்சப்பட்டுக்கொண்டு உறவைத் தவிர்த்து வந்திருக்கிறார்.

இன்னுமொரு சம்பவத்தில், ஓர் ஆண் ‘தன்னுடைய உறுப்பு சிறிதாக இருக்கிறது என்கிற தாழ்வு மனப்பான்மையில்’ மனைவியிடம் நெருங்காமலே இருந்தார்.

தன் உடல் மீதான தாழ்வு மனப்பான்மை காரணமாக உறவைத் தவிர்ப்பவர்கள் ஒருவகை என்றால், முதல் சம்பவம்போல தன் உடலின் சில பகுதிகளை மட்டும் மறைப்பவர்கள் இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகையினர் உறவுகொள்ளும்போதும், தங்களுடைய உடல் குறைபாடு தன் வாழ்க்கைத்துணைக்கு தெரிந்துவிடுமோ என்கிற அச்சத்திலேயே இருப்பார்கள். இந்த அச்சம் காரணமாக அவர்களால் ஆர்கசம் அனுபவிக்கவே முடியாது. சில ஆண்களும், பெண்களும் உச்சக்கட்டம் அடையாமல் போவதற்கு இது முக்கியமான காரணம்.

Dr. Kamaraj
Dr. Kamaraj

உடல் அழகு தொடர்பான கருத்துகள் சமூகத்தில் மாறிக்கொண்டே இருக்கின்றன. 20, 25 வருடங்களுக்கு முன்னால் கொழு கொழு பெண்கள்தான் செக்ஸி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது ஸ்லிம்மாக இருப்பதுதான் செக்ஸி என்கிறார்கள். ஆண்களை எடுத்துக்கொண்டால், எத்தனை பேர் கட்டுமஸ்தான உடலுடன் இருக்கிறார்கள்? உங்கள் உடல் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்; நேசியுங்கள்… ஆணோ, பெண்ணோ ஆரோக்கியமான உடலுடன் இருந்தாலே தாம்பத்திய உறவு இனிமையாக இருக்கும்; ஒவ்வொரு உறவிலும் ஆர்கசமும் கிடைக்கும்” என்கிறார் டாக்டர் காமராஜ்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *