• June 24, 2025
  • NewsEditor
  • 0

மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ‘DNA’.

இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

DNA

நிகழ்ச்சியில் பேசிய அதர்வா, “ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் இந்தப் படத்தில் வேலை செய்யும்போது இந்த ஒரு தருணத்திற்காகத்தான் வேலை செய்தோம். இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்.

‘DNA’படப்பிடிப்பிற்கு சென்றபோது ஒரு நல்ல படத்தில் நடிக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையுடன் தான் சென்றேன். இந்தப் படம் எப்படி மக்களிடம் வரவேற்பை பெறும் என்று யோசித்தெல்லாம் பார்க்கவில்லை. ஒரு நல்ல நேர்மையானப் படத்தை எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தோம். 

அதர்வா
அதர்வா

படம் முடியும்போது நன்றாக வேலை செய்திருக்கிறோம் என்று தோன்றியது. எங்கள் படத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்தத் தருணத்தில் நான்தான் உலகத்தில் மிகவும் சந்தோஷமாக இருக்கும் மனிதர் என்று சொல்லுவேன். நிறைய விஷயங்களை இந்தப் படத்தின் மூலம் கற்றுக்கொண்டேன்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *