
சென்னை: திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக சட்ட விதிப்படி, திமுக கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.