
சென்னை: தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த விவரம்:
- ராஜேந்திர ரத்னூ – முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்
- ஷில்பா பிரபாகர் சதீஷ் – அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை
- ச.விஜயகுமார் – கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர், நில சீர்திருத்தம்
- மா.வள்ளலார் – அரசு செயலாளர், சமூக சீர்த்திருத்தத் துறை
- எஸ்.நாகராஜன் – வணிக வரித்துறை ஆணையர்
- பொ.சங்கர் – அரசு செயலாளர், உயர் கல்வித்துறை
- சி.சமயமூர்த்தி – அரசு செயலாளர், மனித வள மேலாண்மைத் துறை
- கோ.பிரகாஷ் – முதன்மைச் செயலர், உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
- சு.பிரபாகர் – தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
- நா.வெங்கடேஷ் – அரசு சிறப்புச் செயலாளர், நிதித்துறை
- ஆர்.லில்லி – அரசு சிறப்புச் செயலாளர், போக்குவரத்துத் துறை
- சு.கணேஷ் – அரசு சிறப்புச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை
- வீர் பிரதாப் சிங் – அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை, சென்னை
- கே.எம்.சரயு – அரசு இணைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சென்னை
- துரை ரவிச்சந்திரன் – துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை.
- க.கற்பகம் – அரசு இணைச் செயலாளர், உயர் கல்வித்துறை
- ஆர்.வி.ஷஜீவனா – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், சென்னை
- ஸ்ரேயா பி.சிங் – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- ப.மதுசூதன் ரெட்டி – இயக்குநர், நகராட்சி நிர்வாகம்
- சு.சிவராசு – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம்
- ஜெ.விஜயராணி – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்
- தா.கிறிஸ்துராஜ் – இயக்குநர், சுற்றுலா மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்
- கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் – அரசு கூடுதல் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
- ச.உமா – அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, சென்னை
- வீ.ப. ஜெயசீலன் – இணை ஆணையர் (சுகாதாரம்), பெருநகர சென்னை மாநகராட்சி
- மா.சௌ. சங்கீதா – இயக்குநர், சமூக நலம்
- மா.பிரதீப் குமார் – இயக்குநர், பேரூராட்சிகள்
- ராஜ கோபால் சுன்கரா – இயக்குநர், நில அளவை மற்றும் நிலவரித் திட்டம்
- ச.அருண்ராஜ் – மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர்
- நாரணவரே மணிஷ் – மாவட்ட ஆட்சியர், திருப்பூர்
- வெ.சரவணன் – மாவட்ட ஆட்சியர், திருச்சி
- தி.சினேகா – மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு
- கே.ஜே.பிரவீன் குமார் – மாவட்ட ஆட்சியர், மதுரை
- என்.ஓ.சுகபுத்ரா – மாவட்ட ஆட்சியர், விருதுநகர்
- ச.கந்தசாமி – மாவட்ட ஆட்சியர், ஈரோடு
- துர்கா மூர்த்தி – மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
- கா.பொற்கொடி – மாவட்ட ஆட்சியர், சிவகங்கை
- ஆஷா அஜித் – தலைமை இயக்க அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்
- எம்.பி.அமித் – ஆணையர், திருப்பூர் மாநகராட்சி
- எச்.ஆர்.கௌசிக் – வட்டார துணை ஆணையர் (மத்தி) பெருநகர சென்னை மாநகராட்சி
- மோனிகா ராணா – ஆணையர், திருநெல்வேலி மாநகராட்சி
- வி.மதுபாலன் – ஆணையர் , திருச்சி மாநகராட்சி
- பானோத் ம்ருகேந்தர் லால் – ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி
- ரா.சரண்யா – ஆணையர், ஆவடி மாநகராட்சி
- ர. அனாமிகா – இணை ஆணையர், நகராட்சி நிருவாகம், சென்னை
- லலித் ஆதித்ய நீலம் – கூடுதல் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, சென்னை
- அஃதாப் ரசூல் – வட்டார துணை ஆணையர் (தெற்கு), பெருநகர சென்னை மாநகராட்சி
- நிஷாந்த் கிருஷ்ணா – ஆணையர், ஓசூர் மாநகராட்சி
- அர்பித் ஜெயின் – ஆணையர், ஈரோடு மாநகராட்சி
- ர.அ.பிரியங்கா – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலூர்
- பல்லவி வர்மா – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவாரூர்
- அபிலாஷா கௌர் – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நீலகிரி
- திவ்யான்ஷீ நிகம் – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ராமநாதபுரம்
- ஆல்பி ஜான் வர்கீஸ் – இயக்குநர், தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை
- ம.கோவிந்த ராவ் – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம்