• June 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்து லே நகருக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று டெல்லி திரும்பியது. டெல்லியில் இருந்து லடாக்கின் லே நகருக்கு இண்டிகோ விமானம் (6E 2006) இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று காலை வழக்கம்போல் லே நகருக்கு புறப்பட்டது.

இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் சுமார் 180 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் லே நகரை அடைந்ததும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு தரையிறங்க முடியாமல் விமானம் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *