• June 19, 2025
  • NewsEditor
  • 0

2018 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான சாம்பியன்ஸ் என்ற படம், இந்தியில் ‘சித்தாரே சமீன் பர் (Sitaare Zameen Par)’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் மூளை வளர்ச்சி மெதுவாக இருக்கும் சவால் உடைய கூடைப்பந்து வீரர்களின் பயிற்சியாளராக ஆமிர் கான் நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மைக்கேல் ஜாக்சன் என்ற சொல்லை Love Birds என மாற்ற வேண்டும், படத்தின் தொடக்கத்தில் பிரதமர் மோடியின் மேற்கோளை சேர்க்க வேண்டும், தாமரை என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று சில காட்சிகளை நீக்க மத்திய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது. படக்குழுவும் இதை ஏற்று நாளை (ஜூன் 20ம் தேதி) திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடவிருக்கிறது.

Sitaare Zameen Par

இந்நிலையில் சச்சின் மற்றும் அவரது குடும்பத்தினர் இப்படத்தை முன்கூட்டிய சிறப்புக் காட்சிகளுடன் பார்த்ததாக ஆமிர்கான் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

குடும்பத்துடன் இப்படத்தைப் பார்த்த சச்சின், “மனிதர்களின் குறைபாடுகளை புரிந்துகொள்ளும் அழகான படம். மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கொண்ட பல செய்திகள் இப்படத்தில் இருக்கின்றன. ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று கூறியதாக ஆமீர் கான் கூறியுள்ளார்.

சச்சின், ஆமிர் கான்

மேலும், இப்படத்தைப் பார்த்த எழுத்தாளர் சுதா மூர்த்தி, “மனிதர்களின் குறைபாடுகளை எப்படி புரிந்துகொள்ள வேண்டும். குறைபாடு கொண்டவர்கள் எவ்வளவு நல்ல மனம் கொண்டவர்கள், திறமையானவர்கள் என்பதை இப்படம் அழகாகச் சொல்லியிருக்கிறது. வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தம் கொண்ட பல தத்துவங்களை இப்படம் நமக்குச் சொல்லிக் கொடுக்கும்” என்று பாராட்டியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *