
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
மன்னார்கோவிலில் பிறந்தாய் –
ஏழு உடன்பிறந்தோருடன்
கூடிக்குலாவி வளர்ந்தாய் –
ஊரிலே படித்தாய்
கணக்கில் புலியாய் இருந்தாய் –
சிறுவயது கதைகள் பல சொல்லி
வாழ்க்கையின் அடிநாதம் உரைத்தாய் –
வேலை நிமித்தம்
சென்னை வந்தாய்
பார்த்தசாரதி கோவிலில்
பணியில் இருந்தாய்
உன் மக்கள் செல்வாக்கு
திருப்பதி வரை அலைமோதியது –
உன் பேச்சிலர் நாட்கள்
வானமாமலை மடம் நண்பர்கள்
செகண்ட் ஷோ சினிமா
நீ கேட்ட ஹிந்தி, ஆங்கில பாடல்கள்
சீட்டாட்ட காஸ்மோபாலிட்டன் கிளப்
பாஷா கடை வெற்றிலை பாக்கு
ஒன்றாம் நம்பர் பஸ் ஸ்டாண்ட்
உன்னுடைய பிரத்தியேக பழமொழிகள் – என
திருவல்லிக்கேணி முழுதும்
உன் வாசம் வீசும் –
ராமா என்று அழைத்தாலே
ஹனுமான் வருவான் இங்கு
ராமா என்று நினைத்தாலே
நீ இருப்பாய் அங்கு – இதை
அறிந்தோர் சொல்வர் –
காலனி வீட்டு ஜன்னலில்
நீ மாலை வரும் நேரம் –
சிறகடித்து சிறு பிள்ளையாய்
காத்திருப்பேன் நான் –
வெள்ளை பேண்ட்
வெள்ளை சட்டை
கக்கத்தில் ஒரு லெதர் பேக்
வாயில் வெற்றிலை பாக்கு – என்று
தூரத்தில் நீ நிழலாடுகையில் –
எனக்கு தினமும்
வானவில் பார்த்த மகிழ்ச்சிதான் –

தந்தை மகன் போல்
என்றும் இருந்ததில்லை நாம் –
தோளுக்கு கீழே இருக்கும்போதே
தோழன் ஆக்கியவன் நீ –
உன் நட்பு வட்டத்தில்
பேதம் கிடையாது –
என் நண்பர்களும்
உனக்கு நண்பர்கள்தான் –
உன் நகைச்சுவை ஊற்றில்
இன்றும் நான் நனைகிறேன் –
நீ விட்டுச்சென்ற
அச்சுவையை வைத்து
என் நாட்களை கடக்கிறேன் –
காலம் உன்னை
புரட்டிய போதும்
அசையாமல்
நிமிர்த்து நின்றாய் –
கடைசியாய் நீ
அசந்த நேரம்
வெற்றி வாகையை
காலன் சூடி நின்றான் –
நல்லதோ கெட்டதோ
என் பிள்ளைக்கு
நானே ஆசிரியன்
என்று கூறுவாய் –
நீ போகும்போதும்
சொன்னபடியே
வாழ்க்கை பாடம்
எடுத்து விட்டாயே –
அப்பா ……..
மகன் – குப்புஸ்வாமி ராமனாய் வந்தாய்
கணவன் – ராஜலட்சுமி ராமனாய் வாழ்ந்தாய்
அப்பா – பார்த்தசாரதி ராமனாய் முளைத்தாய்
தாத்தா – அணிமலர் ராமனாய் விருட்சமானாய்
சென்று வா ராமா …..Love you & Miss you My Dear HERO
