
சென்னை: மீத்தேன்-ஹைட்ரோகார்பன் திட்டம் தந்த ஸ்டாலின், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல. "அரைவேக்காட்டுத் தனமாக" இருக்கிறதாம் அவருக்கு.