
சென்னை: சர்வதேச தந்தையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தந்தையர் தினத்துக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தந்தையும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியை நினைவுகூர்ந்து வெளியிட்ட பதிவில், “தலைவராக வழிகாட்டிய தந்தை. தந்தையாக நவீனத் தமிழகத்தை செதுக்கிய தலைவர்'' என்று தெரிவித்துள்ளார்.