• June 16, 2025
  • NewsEditor
  • 0

தெலங்கானா அரசின் திரைப்பட விருது விழாவில் 4ம் ஆண்டாக விருதை வென்றிருக்கிறார் துல்கர் சல்மான்.

தெலுங்கில் ‘மகாநாட்டி’, ‘சீதா ராமம்’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ என துல்கர் சமீபமாகக் கதைத்தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்.

இந்தப் படங்களும் மிகப்பெரிய வெற்றியையும், வரவேற்பையும் துல்கருக்குக் கொடுத்தது. இந்நிலையில், தெலுங்கான மாநில விருதைப் பெற்றிருக்கிறார் துல்கர்.

தற்போது தெலங்கானா மாநில திரைப்பட விருது விழாவில் லக்கி பாஸ்கர் படத்திற்கு ஜூரி விருது வழங்கப்பட்டது குறித்து துல்கர் சல்மான், “தெலுங்கு சினிமாவில் எனக்குக் கிடைக்கும் அற்புதமான கதாபாத்திரங்களை நினைத்து மகிழ்கிறேன்.

தெலுங்கில் நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கிறது. விருது கிடைக்கிறது. இந்த உணர்வை விவரிக்க வார்த்தையே இல்லை. தெலங்கானா அரசு மற்றும் மரியாதைக்குரிய அதன் முதலமைச்சர் ரேவந்த் காரு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

விருதுக் குழுவிற்கும் எனது நன்றிகள். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், சினிமாவைக் கொண்டாடும் அற்புதமான தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்” என்று தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ந்திருக்கிறார்.

துல்கருக்குச் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *