
சென்னை: குன்னூர் நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிடாவிட்டால் அப்பகுதி மக்களின் ஆதரவுடன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை, அதிமுக முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல மடங்கு வீட்டு வரி, வணிக வளாகங்களுக்கான வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதுடன், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வை அமல்படுத்தி தமிழக மக்களையும், வியாபாரிகளையும் வஞ்சித்து வரும் திமுக அரசு, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான கடைகளின் வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது.