• June 15, 2025
  • NewsEditor
  • 0

காட்பாடி யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு பயணிகள் ரயில், திருவண்ணாமலை – தாம்பரம் ரயில் உள்பட 6 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதன்படி, ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரை – திருவண்ணாமலைக்கு மாலை 6 மணி (66033), காட்பாடி – திருப்பதிக்கு இரவு 9.10 மணி ( 67210), , திருப்பதி – காட்பாடிக்கு இரவு 7.10 மணிக்கு (67209) இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, திருவண்ணாமலை – தாம்பரத்துக்கு ஜூன் 17, 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில் (66034) ரத்து செய்யப்பட உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *